உதவி இயக்குநர் குடும்பத்திற்கு உதவிய பிரபுதேவா!!!

Thursday, 28th of June 2012
சென்னை::பிரபுதேவாவின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இந்திப் படம் 'ரவுடி ரத்தோர்' பெரும் வெற்றிப் பெற்று வசூல் சாதனைப் படைத்து வருகிறது. இந்த சந்தோஷத்தில் இருந்த பிரபுதேவாவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது அவருடைய உதவி இயக்குநரின் மரணம்.

'போக்கிரி' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய சச்சா என்கிற சந்திரசேகர் இறந்து விட்டார். இந்த தகவல் பிரபுதேவாவுக்கு தெரியப்படுத்தப் பட்டது. ஆனால், பிரபுதேவா தற்போது வெளிநாட்டில் இருப்பதால், தன்னுடைய நிலையை இறந்த குடும்பத்தாருக்கு தெரிவித்திருக்கிறார். மேலும் வசனகர்த்தா வி.பிரபாகர் மூலமாக ரூ.1 லட்சத்தை இறந்தவரின் குடும்பத்தாருக்கு கொடுத்து உதவியிருக்கிறார்.

Comments