Saturday, 30th of June 2012
சென்னை::ஐன்ஸ்டீன் தத்துவத்தை மையமாக வைத்து உருவாகும் படத்தில் டெல்லி ஹீரோயின் நடிக்கிறார். ‘கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்’ படம் ஐன்ஸ்டீன் தத்துவத்தை மையமாக வைத்து உருவாகிறது. இதுபற்றி இயக்குனர் வெங்கி கூறியதாவது: அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் பல்வேறு தத்துவங்களையும் கூறியிருக்கிறார். வாழ்க்கையில் எதெல்லாம் நடக்கிறதோ அவை முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த கருத்துகுறித்து பல்வேறு சர்ச்சைகள் இன்னும் நிலவுகிறது. இந்த கருத்தை மையமாக வைத்து ஸ்கிரிப்ட் உருவாக்கி இருக்கிறேன். இதில் காதலையும் சேர்த்திருக்கிறேன். வழக்கமாக தமிழில் முக்கோண காதல் கதை, ஆக்ஷன் கதை என்றுதான் படங்கள் வருகிறது. அதுபோல் இல்லாமல் இது வித்தியாசமான அனுபவம் தரும் படமாக இருக்கும். இதில் வரும் சம்பவங்கள் நிஜவாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டது. ‘பம்பாய்’ படத்தில் அரவிந்த்சாமியின் மகன்களாக வரும் இரண்டு சிறுவர்களில் ஒருவரான ஹிருதய் ராஜ் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். டெல்லி மாடல் அழகி அதித்தி செங்கப்பா ஹீரோயின். இப்படத்துக்காக 600 பேரை ஆடிஷன் செய்ததில் தேர்வானவர்தான் அதித்தி. ஒளிப்பதிவு டி.எஸ்.வாசன். இசை ப்ஹனி கல்யாண். வசனம் சித்ரா.

Comments
Post a Comment