

சென்னை::பிராச்சி தேசாயை நினைவிருக்கிறதா... சமீபத்தில் வெளியாகி நல்ல பெயரைப் பெற்றுள்ள தடையறத் தாக்க படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமான நடிகை இவர்தான்.
ஆனால், ஹீரோ அருண் விஜய் என்றதும் நடிக்க மறுத்து ஓடிவிட்டார் பிராச்சி. அந்தப் படத்துக்காக இவர் வாங்கி சம்பள முன்பணத்தைக் கூட இன்னும் திருப்பித் தரவில்லை. நடிகர் சங்கத்தின் இந்த விவகாரம் இன்னும் நிலுவையில் உள்ளது.
இப்போது, கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் இந்தியில் உருவாகும் சாமி ரீமேக்கில் நடிக்க பிராச்சியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
தங்கள் படவிவகாரம் அப்படியே உள்ள நிலையில் பிராச்சியை ஒப்பந்தம் செய்வதா என தடையறத் தாக்க தயாரிப்பாளர் இப்போது அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
ஹரியின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான சாமி படம், கடந்த 2003-ல் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது. இப்படம்தான் இந்தியில் சஞ்சய் தத் நாயகனாக நடிக்க ரீமேக் செய்யப்பட உள்ளது. கே.எஸ். ரவிக்குமார் இயக்கவிருக்கிறார்.
Comments
Post a Comment