Tuesday, 26th of June 2012
சென்னை::தமிழ் சினிமாவில் தற்போதைய இளம் ஹீரோக்களில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் சிம்பு, தனுஷ். தனுஷ் செய்யும் ஒவ்வொன்றையும் எதிர்ப்பது போல் எதையாவது செய்துகொண்டிருக்கும் சிம்பு, தான் நடித்திருக்கும் ’வாலு’ படத்திலும் தனுஷ் பேசிய வசனத்திற்கு எதிர் வசனம் பேசி தனுஷை வம்பிற்கு இழுத்தார்.
ஒருவரையொருவர் திட்டி நடித்தால் தான் வளர முடியும்’ என்பதில் சிம்பு உறுதியாக இருந்தாலும் தனுஷ் அதை கண்டுகொள்ளாமல் இருந்தார்.
பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது சிரித்த முகத்துடன் பேசும் சிம்பு தன் படங்களில் தனுஷின் செயல்களை எதிர்த்துக் கொண்டு தான் வந்தார். சிம்பு-தனுஷின் ரசிகர்களிடையேயும் இதே போன்ற மனோபாவம் வந்துவிட்டதால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் துபாயில் நடந்த SIIMA-விருது வழங்கும் விழாவில் தனது மனைவியுடன் கலந்துகொண்ட தனுஷ் மேடையில் பேசும்போது, விழாவில் கலந்துகொண்டு ஸ்டைலிஷ் நடிகருக்கான விருதைப் பெற்ற சிம்புவை மேடைக்கு அழைத்தார்.
சிம்பு மேடைக்கு வந்ததும் “நாங்கள் இருவரும் எதிரிகள் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் உண்மை என்னவென்றால் நாங்கள் இருவரும் எதிரிகள் தான். அது வெளியில்” என்று கூறினார். அதுவரை சிரித்துக்கொண்டிருந்த சிம்பு திடீரென “ நாங்கள் இருவரும் உள்ளுக்குள் நண்பர்களாகத் தான் இருக்கிறோம்” என்று கூறினார்.
சிம்புவின் தோள் மீது கை போட்டு பேசிக்கொண்டிருந்த தனுஷ், சிம்புவிடம் தன்னுடன் இணைந்து ‘கொலவெறி’ பாடல் பாடுமாறு கூறினார். பாடல் வரிகள் தெரியுமா எனக் கேட்டு சிரித்துவிட்டு “ஓகே ரெடி மாமா?” என தனுஷ் கேட்டதும், “ரெடி மாமா” என்று சிம்பு கூறிய பின் இருவரும் இணைந்து பாட்டு பாட துவங்கினார்கள்.
சிம்புவும் தனுஷும் மேடையில் பாடியதை தனுஷின் மனைவி ஐஷ்வர்யா கைதட்டி ரசித்துக்கொண்டிருந்தார்.

Comments
Post a Comment