Saturday, 16th of June 2012
சென்னை::சின்னத்திரையில் ஏதாவது ஒரு சேனலில் நையாண்டித்தனமாகவோ, அறிவுப்பூர்வமாகவோ நிகழ்ச்சிகளை வழங்குவது யூகிசேதுவின் ஸ்பெசல். விஜய் டிவியில் நையாண்டி தர்பார் நிகழ்ச்சி யூகிசேதுவிற்கு சிறப்பான பெயரை பெற்றுத்தந்தது.
இப்பொழுது ஜெயா டிவியில் யூகியுடன் யூகியுங்கள் என்ற நிகழ்ச்சியின் மூலம் சிறப்பான தோற்றத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளார். புகழ்பெற்ற விஐபிக்கள் மட்டும்தான் சின்னத்திரையில் பேட்டி கொடுக்கவேண்டும் என்று இருந்த நிலையை மாற்றி வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர்களை இனம் காட்டுகிறார் யூகிசேது. இந்த நிகழ்ச்சியின் மூலம் குடத்திலிட்ட விளக்காய் இருந்தவர்கள் புகழ் வெளிச்சத்திற்கு வருகிறார்கள்.
கைகளை இழந்த சிறுவன் இன்று கணினி `வரைகலை' கலைஞனாக திகழ்கிறான். இரண்டு வயது குழந்தை 200 நாட்டு கொடிகளை இரண்டே நிமிடத்தில் சொல்லி ஆச்சரியப்படுத்துகிறது. பெற்ற தாயால் கைவிடப்பட்ட வாய்பேச முடியாத பெண் குழந்தை வளர்ந்து நன்றாக பேசியதோடு மட்டுமல்லாமல் 10 மணி நேரம் தொடர்ந்து பாடி கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறது, அதுபோல பாட்டிலில் படம் வரையும் டிரம்மர் ஸ்ரீதர் உள்ளிட்ட சாதனையாளர்கள் இவரது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
இவை தவிர, உலகம் முழுவதும் அகமும் புறமும் பற்றி வந்து சேரும் பலதரப்பட்ட விசித்திரமான செய்திகளை தனக்கே உரிய நையாண்டி பாணியில் விமர்சிக்கும் யூகிசேதுவின் முன்னுரையும் இதில் அடங்கும். வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு யூகியுடன் யூகியுங்கள் நிகழ்ச்சியை உங்கள் ஜெயாடிவியில் கண்டு ரசிக்கலாம். வரும் வாரங்களில் மேலும் சில விசேஷ அத்தியாயங்களும், புகழ்பெற்ற மனிதர்களும் பங்கேற்க உள்ளனர்.

Comments
Post a Comment