Saturday, 23rd of June 2012
சென்னை::1982-ம் வருடம் ஏ.வி.எம். தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த படம் சகலகலா வல்லவன். இப்படத்தில் கமல் கிராமத்துவாசி, பட்டணத்துவாசி என இரு வேடங்களில் அசத்தியிருந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அம்பிகா நடித்திருந்தார்.
இப்படத்தில் இசைஞானி இசையமைப்பில் ‘நேத்து ராத்திரி யம்மா, தூக்கம் போச்சுடி யம்மா’, ‘இளமை இதோ இதோ..’ போன்ற பாடல்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றது.
80-களில் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கிய இந்த படத்தை தற்போது ரீமேக் செய்ய முடிவெடுத்திருக்கின்றனர். இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க சூர்யா விருப்பம் தெரிவித்திருந்தார்.
இப்படத்தின் ரீமேக் உரிமையைப் பெற சூர்யா வேறு ஒரு நிறுவனம் மூலமாக ஏ.வி.எம். நிறுவனத்தை அணுகியிருக்கிறார். ஆனால், ஏ.வி.எம்.நிறுவனமோ இப்படத்தை தாங்களே ரீமேக் செய்ய விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்படத்தில் நடிக்க சூர்யாவையே ஒப்பந்தம் செய்துள்ளது ஏ.வி.எம்., இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments
Post a Comment