சிங்கப்பூரில் இந்திய பட விழா: பங்கேற்க நடிகர்-நடிகைகள் பயணம்!!!

Thursday, June, 07, 2012
சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா சிங்கப்பூரில் ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் பங்கேற்க இந்தி நடிகர்-நடிகைகள் சிங்கப்பூர் புறப்பட்டார்கள். தமிழ் நடிகர்-நடிகை களும் இதில் கலந்து கொள்கிறார்கள்.

கமலஹாசனின் விஸ்வரூபம் படத்தின் சில காட்சிகள் இவ்விழாவில் திரையிடப்படுகிறது. இதற்காக கமல் அங்கு புறப்பட்டுச் சென்றார். விஸ்வரூபம் படம் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. வெளிநாடுகளில் படத்தை எடுத்துள்ளனர். இதன் டிரைய்லரை காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

சிங்கப்பூர் பட விழாவில் டிரைய்லர் வெளியாவதுடன் 15 நிமிடங்கள் முக்கிய சீன்களை திரையிட உள்ளனர். இவ்விழாவில் பிரபு தேவாவின் நடன நிகழ்ச்சி நடக்கிறது. 'அண்ணாத்த ஆடுறார் வச்சிக்கோ வச்சிக்கோ' போன்ற தமிழ் பாடல்களுக்கும் நடனம் ஆடுகிறார். பிரபுதேவாவுடன் பிரியங்கா சோப்ரா, ரன்பீர்கபூர், சாகித்கபூர் உள்ளிட்ட பல நடிகர்- நடிகைகள் ஆடுகிறார்கள்.

Comments