இயக்குநர் கெளதம் மேனன் தயாரிக்கும் 'தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்!!!

Saturday, 30th of June 2012
சென்னை::'நீதானே என் பொன்வசந்தம்' படத்தை இயக்குவதோடு, தனது ஃபோட்டான் கதாஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்தும் வருகிறார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரு மொழிகளில் படங்களை தயாரித்து வரும் கெளதம் மேனன் தற்போது புதுமுக இயக்குநர் இயக்கும் 'தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்' என்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரிக்கிறார்.

பிரபுதேவாவிடம் இணை இயக்குநராக பணியாற்றிய பிரேம் சாய் என்பவர் இப்படத்தை தயாரிக்கிறார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் 'கொரியர் பாய் கல்யாண்' (Courier Boy Kalyan) என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் ஹீரோவாக ஜெய் நடிக்கிறார்.

நகைச்சுவை, காதல், ஆக்ஷன், என்று ஜனரஞ்சகமான சினிமாவாக உருவாகும் இபடத்தின் கதையை கேட்ட கெளதம் மேனன், சிரிப்பை கட்டுப்படுத்த ரொமப்வே சிரமபட்டாராம். அந்த அளவுக்கு திரைக்கதையில் நகைச்சுவை இருக்கிறதாம்.

இப்படத்தின் தமிழ் பாகத்தில் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார். இவருடன் சந்தானம், வி.டி.வி கணேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். தெலுங்கு பாகத்தில் 'இஷ்க்' என்ற தெலுங்கு படத்தில் நடித்த நிதின் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்திற்கு பின்னணி பாடகரும், அரவான் படத்திற்கு இசையமைத்தவருமான கார்த்திக் இசையமைக்கிறார்.

சென்னையில் துவங்கிய இபப்டத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து மூன்று மாதங்கள் ஐதராபாத் நகரில் நடைபெற இருக்கிறது.

Comments