Friday, June, 08, 2012
திரைப்பட பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலை பாட வைப்பது என்பது பெரிய விஷயம் அல்ல, அவரை ஒரு பாடல் காட்சிகளிலோ அல்லது வீடியோ ஆல்பத்திலோ நடிக்க வைப்பதுதான் பெரிய சிரமம். இதற்காக பலபேர் முயற்சி செய்து தோல்வி அடைந்திருக்கிறார்கள்.
இதை உடைத்து ஸ்ரேயா கோஷலை தமிழில் உருவான ஒரு வீடியோ ஆல்பத்தில் இசையமைப்பாளர் டி.இமான் இடம்பெற செய்திருக்கிறார்.
'மனம் கொத்திப் பறவை' படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதால் சந்தோஷமடைந்திருக்கும் இமான், தனது அடுத்த வெளியிடான 'சாட்டை' படத்தின் பாடல்களையும் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கொடுப்பதற்கு கடினமாக உழைத்துகொண்டிருக்கிறார்.
இதற்காக சமீபத்தில் 'சாட்டை' படத்திற்கான ஒரு பாடலை இணைய தளங்களில் வெளியிடப்பட்டது. இந்த ஒரு பாடல் அமோகமாக வெற்றி பெற்றிருக்கிறது. 'சகாயனே சகாயனே' என்று தொடங்கும் இந்த பாடலை பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலை பாடவைத்ததும் இன்றி, அவரை அந்த பாடலுக்கு ஆடவும் வைத்திருக்கிறார்.
இயக்குநர் பிரபுசாலமன், ஜான்மேக்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் 'சாட்டை' படத்தில் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். அன்பழகன் என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார்

Comments
Post a Comment