Saturday, 16th of June 2012
சென்னை::பாலிவுட் நடிகைகளைவிட, தென்னிந்திய நடிகைகளுக்கு மது-சிகரெட் பழக்கம் அதிகமாக இருக்கிறது'' என்கிறார் நடிகை சனா.
'சிலம்பாட்டம்', 'தம்பிக்கு எந்த ஊரு', 'ஆயிரம் விளக்கு', 'பயணம்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சனாக்கான்.
ஒரு நிகழ்ச்சிக்காக சென்னை வந்த அவர் நிருபர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், "நான் மும்பை பெண்ணாக இருந்தாலும், எனக்கு ஒரு பாய் பிரண்ட் கூட கிடையாது. தினமும் 5 வேளை தொழுகை நடத்துகிறேன். வருடத்தில் 30 நாட்கள் விரதம் இருக்கிறேன். எனக்கு சிகரெட் பழக்கம் கிடையாது. குடிபழக்கமும் இல்லை.
பொதுவாகவே இந்தி நடிகைகளிடம்தான் சிகரெட்-மது பழக்கம் அதிகமாக இருக்கிறது என்று கருதுகிறார்கள். இந்தி நடிகைகளைவிட, தென்னிந்திய நடிகைகளுக்கு சிகரெட், மது பழக்கம் அதிகமாக இருக்கிறது. குடித்துவிட்டு தள்ளாடிக்கொண்டே போவதை நான் என் கண்களால் பார்த்திருக்கிறேன். ஆனால் அதெல்லாம் வெளியில் தெரிவதில்லை. மறைத்துவிடுகிறார்கள்.
மும்பைப் பெண், சென்னைப் பெண் என்றெல்லாம் எதுவும் கிடையாது. எல்லாம் நாம் வளரும் விதம், சூழ்நிலைக்கு பலியாகாமல் இருப்பதைப் பொருத்தே அமைகிறது," என்றார்.

Comments
Post a Comment