
சென்னை::தனு வெட்ஸ் மனு படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் தனது அடுத்தப் படமான ரான்ஜனாவுக்கு தனுஷையும், சோனம் கபூரையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார். இதுவொரு ரொமான்டிக் படம். இது பற்றி மேலும் சில சுவாரஸியமான தகவல்கள் தெரிய வந்திருக்கிறது.
ஆனந்த் ராஜ் கபூரின் தீவிர ரசிகர். ராஜ் கபூரும், நர்கீஸும் அந்தக் காலத்தில் நம்மூர் கமல், ஸ்ரீதேவி ஜோடிக்கு இணையாக கருதப்பட்டனர். இவர்களின் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரிக்கு இன்றளவும் இணையில்லை என்பது ராஜ் கபூர் ரசிகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஆனந்த் அவர்களில் ஒருவர்.
ரொமான்டிக் விஷயத்தில் திரையிலும், திரைக்கு வெளியிலும் ராஜ் கபூர் ஒரு கிங். குறிப்பாக அவருக்கும் நர்கீஸுக்கும் இடையிலான காதல் காட்சிகள். இருவரும் 16 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். என்னுடையப் படங்களில் ராஜ் கபூரின் ரொமான்டிக் காட்சிகளை மறு உருவாக்கம் செய்ய முயன்றிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ஆனந்த்.
தனுஷின் இந்திப் பேச்சை மேம்படுத்த சில டிவிடிகளை கொடுத்திருக்கிறார் ஆனந்த். அனைத்துமே ராஜ் கபூர் நடித்தப் படங்கள். இந்தப் படமும் ராஜ் கபூர், நர்கீஸ் காதலை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது என்ற தகவலும் உள்ளது.
Comments
Post a Comment