தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேட்பதா? நீது சந்திரா!!!

Monday, 11th of June 2012
சென்னை::சினிமா தவிர எனது தனிப்பட்ட விஷயங்கள் பற்றி பேச விரும்பவில்லை என்று நீது சந்திரா கூறினார். சர்வதேசப் படம் ஒன்றில் நடித்துவரும் நீது சந்திரா கூறியதாவது: வெளிநாட்டில் இருந்தாலும் சொந்த ஊரில் இருப்பது போலான சுகம் எங்கும் இருக்காது. கடந்த 10 நாட்களாக வெளிநாட்டில் இருக்கிறேன். எப்போது ஷூட்டிங் முடிந்து மும்பைக்கு செல்லலாம் என துடித்துக்கொண்டிருக்கிறேன். சர்வதேச படம் அல்லது ஹாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்று எப்போதும் நினைத்ததில்லை. அப்படியொரு ஆசையும் இல்லை. இருந்தாலும் எதிர்பார்க்காத விஷயங்கள் சில நேரங்களில் நடந்துவிடுவது உண்டு. அப்படி கிடைத்ததுதான் இந்தப் பட வாய்ப்பும். இந்தி நடிகர் ரன்தீப் ஹூடாவுடன் உங்களுக்கு காதலா என்று கேட்கிறார்கள். சினிமாவில் என் நடிப்பு மற்றும் அது தொடர்பான விஷயங்கள் மட்டுமே வெளியே தெரியவேண்டும் என நினைக்கிறேன். எனது தனிப்பட்ட விஷயங்கள் செய்தி ஆவது தேவையில்லாதது. அதை வெளிப்படுத்த விரும்பவில்லை. மற்றவர்களுக்கு அது வேண்டிய விஷயமும் இல்லை.

Comments