Thursday,14th of June 2012
சென்னை::ஷங்கரால் மணிரத்னம் படத்திலிருந்து விலகியிருக்கிறார் சமந்தா. மஸ்கோவின் காவிரி, பாணா காத்தாடி படங்களில் நடித்தவர் சமந்தா. அறிமுக படங்கள் ஹிட்டாகாவிட்டாலும் சமந்தாவுக்கு வாய்ப்புகள் குவிந்தது. கவுதம் மேனன் இயக்கும் ‘நீ தானே என் பொன் வசந்தம் இருமொழி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதையடுத்து தெலுங்கில் முன்னணி நடிகர்கள் படங்களும் இவரை தேடி வந்தன. இந்நிலையில் மணிரத்னம் இயக்கும் ‘கடல் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால் ஒரே இரவில் முன்னணி ஹீரோயின்கள் வரிசையில் இடம் பிடித்தார். ஆனால் ஒப்பந்தமான சில நாட்களிலேயே அப்படத்திலிருந்து விலகினார்.
ஹீரோவாக அறிமுகமாகும் கார்த்திக் மகன் கவுதமைவிட முதிர்ச்சியான தோற்றம் இருப்பதால் சமந்தாவை மணிரத்னம் நீக்கியதாக பட குழுவினர் தெரிவித்திருந்தனர். ஆனால் மணிரத்னம் கேட்ட நேரத்தில் கால்ஷீட் ஒதுக்க முடியாததால் விலகிவிட்டதாக சமந்தா தரப்பு கூறியது. தற்போது மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ஷங்கர், தான் இயக்கும் புதிய படத்துக்கு ஹீரோயின் தேடிக்கொண்டிருந்தார். அவரிடமிருந்து சமந்தாவுக்கு அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. வர்த்தக ரீதியாக ஷங்கர் படத்தில் நடிப்பதுதான் பிளஸ் என உடனிருந்தவர்கள் சொன்னதையடுத்தே மணிரத்னம் படத்திலிருந்து சமந்தா விலகிவிட்டதாக கூறப்படுகிறது. தேர்தல் முறைகேடுகளை மையமாக வைத்து ஷங்கர் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார். இப்படத்தில் நடிக்க 100 நாட்களுக்கும் அதிகமாக கால்ஷீட் தேவைப்படுகிறது என்று சமந்தாவிடம் ஷங்கர் கேட்டாராம். இதையடுத்தே சமந்தா மணிரத்னம் படத்திலிருந்து விலகியிருப்பதாக கூறப்படுகிறது.

Comments
Post a Comment