தங்கருக்கு நோ சொன்ன ஒளிப்பதிவாளர்!!!

Friday, ,June, 08, 2012
தங்கர்பச்சான் தனது அம்மாவின் கைபேசி படத்தின் படப்பிடிப்பை நெய்வேலியில் தொடங்கி தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறக்ர். இந்தப் படத்துக்கு அவரே ஒளிப்பதிவு செய்கிறார்.

சாந்தனு, இனியா நடிக்கும் இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்ஙதார் தங்கர். அவரை சந்தித்து தனது படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. ஆனால் ராம்ஜி தங்கருக்கு நோ சொல்லியிருக்கிறார்.

வேறு படங்களில் பிஸியாக இருப்பதால் கால்ஷீட் ஒதுக்க முடியாது என்றுஅவர் சொன்னதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக தங்கரே ஒளி ஓவிய வேலையையும் தனே எடுத்துக் கொண்டிருக்கிறார். வரும் பதினைந்தாம் தேதிவரை நெய்வேலியில் அம்மாவின் கைபேசி படப்பிடிப்பு நடக்க உள்ளது.

Comments