Friday, 22nd of June 2012
சென்னை::கவர்ச்சி காட்டுவதில் கறாராக இருக்க மாட்டேன், என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். பழனி படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். தனது அழகான கண்களால் ரசிகர்களை கைது செய்து வரும் காஜல், தற்போது மாற்றான், துப்பாக்கி போன்ற படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல், தற்போது தாதா என்ற படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்துவருகிறார். இப்படத்தில் படுகவர்ச்சியாக நடித்திருக்கிறாராம் காஜல், அதிலும் குறிப்பாக ஒரு பாடல் காட்சியில் குட்டை பாவாடை அணிந்து குத்தாட்டம் போட்டிருக்கிறாராம்.
இதுகுறித்து காஜல் அளித்துள்ள பேட்டியில், சினிமாவுக்கு வந்துவிட்ட பிறகு யாரும் கவர்ச்சியா...? என்று கேட்கவே கூடாது. அதுவும் கமர்ஷியல் படம் என்றால் கவர்ச்சி இருக்கத்தானே செய்யும். தேவையென்றால், நடித்துத்தானே ஆக வேண்டும், கவர்ச்சி காட்டுவதில் எல்லாம் கறாராக இருந்தால் சினிமாவில் இருக்க முடியாது, என்று கூறியுள்ளார்.

Comments
Post a Comment