
சென்னை::உள்ளூரில் எப்படியிருந்தாலும் வெளியூர் சென்றால் நேரம் பார்க்காமல் வேலை செய்கிறவர்கள்தான் நம்மாட்கள். அதுவும் வெளிநாடு என்றால் விடிய விடிய வேலை பார்ப்பதுண்டு. மீண்டும் விசா வாங்கி ரீஷுட் போக முடியாதே.
தாண்டவம் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடந்து வருவது தெரியும். மழை காரணமாக சில நாள் படப்பிடிப்பு வீணானது. இதனை காம்பன்சேட் செய்யும்விதமாக விக்ரம், லடட்சுமிராய், சந்தானம், நாசர், எமி ஜாக்சன் என்று எல்லோரும் விடிய விடிய வேலை பார்க்கிறhர்கள். இதனை படத்தை தயாரிக்கும் யுடிவி நிறுவனத்தின் நிர்வாகி தனஞ்செயன் குறிப்பிட்டு புல்லாpத்துப் போயிருக்கிறhர்.
ஆக்ஷன் படமான தாண்டவத்தை விஜய் இயக்கி வருகிறார். வரும் 15 ஆம் தேதியுடன் லண்டன் படப்பிடிப்பை முடித்துக் கொள்ள தீர்மானித்துள்ளனர்.
Comments
Post a Comment