Monday, 18th of June 2012
துபாயில் நடக்கும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவில் பிரபல பாடகர்கள், பாடகிகள் பங்குபெறும் இசை நிகழ்ச்சி நடக்கிறது.
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழா வரும் 21 மற்றும் 22-ம் தேதிகளில் துபாயில் நடக்கிறது. பிரமாண்டமாக நடக்க உள்ள இவ்விழாவுக்கு தினகரன் நாளிதழ் பிரின்ட் மீடியா பார்ட்னராக உள்ளது. இவ்விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரைப்பட உலகினர் கலந்து கொள்கின்றனர். இதில் நான்கு மொழிகளிலும் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் உள்பட 19 பிரிவுகளில் விருது வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதுக்கு சிறப்பு ஜூரிகளாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள பட உலகை சேர்ந்த 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விழாவில் சிறப்பு பேஷன் ஷோ நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. இதில் ஸ்ரேயா, சனாகான், லட்சுமி ராய், மது ஷாலினி, தீக்ஷா சேத், கார்த்திகா, ராகிணி திவிவேதி, நிதி சுப்பையா, பூனம் கவுர், பிந்து மாதவி உட்பட முன்னணி நடிகைகள் 18 பேர் பங்குபெறுகிறார்கள். அஜ்மல், ராணா, சர்வானந்த், திகாந்த் மற்றும் மாடல்களும் இந்த பேஷன் ஷோவில் கலந்துகொள்கின்றனர். விருது நிகழ்ச்சிக்கிடையே பிரமாண்டமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. அதில் ஒரு பகுதியாக, இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், ‘3‘ பட இசை அமைப்பாளர் அனிரூத், பாடகிகள், சின்மயி, ஆண்ட்ரியா, மஞ்சரி, ஆகன்ஷா பதம்ஸி, பாடகர்கள் விஜய் ஜேசுதாஸ், அவினாஸ் உட்பட பலர் பங்குபெறும் பிரமாண்ட கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

Comments
Post a Comment