Sunday, 10th of June 2012
விஸ்பரூபம் படத்தில் தீபகா படுகோன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் நடிக்க மறுத்து விட்டார். உண்மையில் அந்த வேடத்திற்கு தீபிகாவின் பெயரை நான் பரிந்துரைக்கவில்லை. எனது படத்தின் பைனான்ஷியர்தான் தீபிகா நடிக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டினார் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விழாவில் முதல் முறையாக விஸ்வரூபம் காட்டப்பட்டது. படத்தப் பார்த்த அத்தனை பேரும் வியந்து பாராட்டித் தள்ளி விட்டனராம்.
மிகப் பெரிய அளவில் இப்படம் பேசப்படும் என்பதே படத்தைப் பார்த்தவர்களின் கருத்தாக உள்ளது.
விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள், இப்படத்தில் முதலில் தீபிகா படுகோன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் நடிக்கவில்லை, ஏன் என்று கேட்டனர்.
அதற்கு் பதிலளித்த கமல், தீபிகா இப்படத்தில் இடம் பெறுவதாக இருந்தது. ஆனால் அவர்தான் நடிக்க மறுத்து விட்டார். நாங்கள் கேட்ட தேதிகளை அவரால் கொடுக்க முடியவில்லை. எனவே நாங்கள் அவரை விட்டு வி்ட்டோம்.
உண்மையில் எனது படத்தின் பைனான்ஷியர்தான் தீபிகா நடிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். நான் அவரது பெயரை ஆரம்பத்திலிருந்தே பரிந்துரைக்கவில்லை.
இருந்தாலும், இப்படத்தில் நடித்துள்ள அத்தனை பேரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். இது எனக்கு பெரும் திருப்தி அளித்துள்ளது, மகிழ்ச்சி அளித்துள்ளது என்றார் கமல்.

Comments
Post a Comment