
சென்னை::நாள் ஒரு பரபரப்பு செய்தியும், பொழுது ஒரு விளம்பரமும் என்று தமிழ் திரையுலகில் வலம் வரும் பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன், சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இவரும் 'நீயா நானா' நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் அந்த நிகழ்ச்சிக்கு உண்டான ரசிகர்களை காட்டிலும் அதிகமான ரசிகர்களை தன்வசம் ஈர்த்துகொண்டார்.
எத்தனைப் பேர், எத்தனை விதமாக கலாய்த்தாலும் சலிக்காமல் தனது வேலையை செய்து வரும் பவர் ஸ்டார், தனடு அடுத்த படத்தில் சந்தானத்தை நடிக்க வைக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. சந்தானமும், பவர் ஸ்டாரும் சந்தித்து பேசியிருக்கிறார்களாம். இப்போதைக்கு இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம். எனது முடிவை விரைவில் தெரிவிக்கிறேன். என்று சந்தானம் பவர் ஸ்டாரிடம் கேட்டுகொண்டாராம்.
தற்போது தமிழ் சினிமாவை சந்தானம் தனது காமெடி மூலம் கலக்கி வருகிறார் என்றால், வேறு ஒரு வழியில் பவர் ஸ்டாரும் காமெடிதான் செய்து கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட இந்த இரண்டு பேரும் இணைந்தால், அந்தப் படம் கோலிவுட்டின் வசூல் சாதனைப் படமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
Comments
Post a Comment