கோச்சடையானுக்காக காத்திருக்கும் ஜப்பானியர்கள்!!!

Sunday, 10th of June 2012
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்தைப் பார்க்க அவருடைய ஜப்பானிய ரசிகர்கள் பேராவலாக உள்ளனர்.

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள கோச்சடையான் படப்பிடிப்பு முடிந்துவி்ட்டது. ஹாலிவுட் படமான அவதாரில் பயன்படுத்தப்பட்ட மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் வெளியாகும் முதல் 3டி படம் கோச்சடையான். இதற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அசத்தலாய் இசையமைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

கோச்சடையானில் கெஸ்ட் ரோலில் ஐஸ்வர்யா ராய் வருகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை என்று இயக்குனர் சௌந்தர்யா தெரிவித்துள்ளார். இந்த படம் ஜப்பானிய மொழி மற்றும் ஆங்கிலத்திலும் டப் செய்து வெளியிடப்படுகிறது. ரஜினிகாந்துக்கு ஜப்பானில் ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அவர்களின் வசதிக்காகத் தான் ஜப்பானிய மொழியிலும் டப் செய்யப்படுகிறது.

இந்நிலையில் கோச்சடையான் படத்தைப் பார்க்க ஜப்பானிய ரசிகர்கள் பேராவலாக இருக்கிறார்களாம். அவர்கள் மட்டுமில்லை தமிழ் ரசிகர்களும் படம் எப்பொழுது வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Comments