Wednesday,13th of June 2012
சென்னை::தமிழ், கன்னடத்தில் பிரபல நடிகையாகத் திகழும் குத்து ரம்யா என்கிற திவ்யா தன் காதல் மற்றும் காதலன் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.
போர்ச்சுக்கல் தொழில் அதிபர் ரபேலை அவர் காதலிக்கிறாராம். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு மேல் இந்தக் காதல் ஓடிக்கொண்டிருக்கிறதாம்.
இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாகவும் திருமண தேதியை ஓரிரு தினங்களில் அறிவிக்க உள்ளதாகவும் கன்னட திரையுலகில் செய்தி பரவியது.
இதுகுறித்து திவ்யா கூறுகையில், "நானும் ரபேலும் நல்ல புரிதலுடன் உறவைத் தொடர்கிறோம். திருமணத்துக்கு அவசரப்படவில்லை. திருமண தேதியை முடிவு செய்து விட்டதாக வெளியான செய்தி வதந்திதான். நான் சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்துகிறேன். ரபேலுக்கும் தொழில் சம்பந்தமான பணிகள் நிறைய இருக்கின்றன. இருவரும் பேசி நிச்சயம் திருமண தேதியை வெளியிடுவோம்," என்றார்.

Comments
Post a Comment