ஐயய்யோ, தமன்னாவா: மிரளும் பேச்சலர் ஹீரோக்கள்!!!

Monday, 18th of June 2012
சென்னை::தமன்னாவுடன் நடிக்க வேண்டும் என்றாலே மணமாகாத இளம் ஹீரோக்கள் மிரளுகிறார்களாம்.

தமன்னாவுக்கு தமிழில் வாய்ப்புகள் ஓரளவு தான் வருகின்றன என்றாலும் தெலுங்கில் அவருக்கு வாய்ப்பு மழையாகக் கொட்டுகிறது. அதனால் கை நிறைய படங்கள் வைத்துள்ளார். இது தவிர விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்றாலே திருமணம் ஆகாத இளம் ஹீரோக்கள் பயப்படுகிறார்களாம்.

இது என்னடா உல்டாவா இருக்கு என்று தானே நினைக்கிறீர்கள். அவர்களின் பயத்திற்கு காரணம் இருக்கு. தமன்னாவுடன் தெலுங்கில் ஜோடி சேர்ந்த ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன்,ராம் சரண் தேஜா மற்றும் தமிழில் கார்த்தி ஆகியோருக்கு திருமணமாகிவிட்டது. இதனால் தமன்னாவுக்கு கல்யாண ராசி என்றும், அவருடன் நடித்தால் திருமணமாகாத ஹீரோக்களுக்கு சீக்கிரமே திருமணமாகிவிடும் என்றும் நம்பப்படுகிறது.

நிறைய படங்களில் நடித்து பெயரும், புகழும் வாங்க வேண்டும் என்று நினைப்பில் போராடிக் கொண்டிருக்கும் இளம் ஹீரோக்கள் தமன்னாவுடன் நடிக்க வேண்டும் என்றால் பயப்படுவதற்கு இந்த கல்யாண ராசி தான் காரணம்.

Comments