கிலி கிளப்பும் கேப்டன்!!!

Friday, 15th of June 2012
சென்னை::காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. அதற்காக இப்படியா? சத்தமாக சொல்ல முடியாமல் சைலண்டாக புகைகிறார்கள் முன்னணி இயக்குனர்கள்.

விஷயம் வேறென்றுமில்லை. கேப்டன் தனது இளைய மகனை சினிமாவில் அறிமுகப்படுத்தயிருக்கிறார் இல்லையா. அறிமுகம் அட்டகாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக இவர் அழைத்துப் பேசிய இயக்குனர்கள் யார் என்று தெரிந்தால் அசந்து போவீர்கள். ஒருவர் முருகதாஸ்.

இன்னொருவர் பாலாஜி சக்திவேல். முருகதாஸ் ஓகே. பாலாஜப் சக்திவேல் மீது கேப்டனுக்கு என்ன கோபம் என்று உடனிருப்பவர்களுக்கே குழப்பம்.

விஜய் படத்தை முடித்த பிறகு 15 கோடி சம்பளத்தில் அக்ஷய் குமாரை வைத்து ஒரு படம் அதற்கடுத்து ஷாருக்கான் முடிந்தால் ஹாலிவுட் என்று முருகதாஸின் சைக்கிள் றெக்கை கட்டிப் பறக்கிறது.

இந்த கதை தெரியாமல் அம்பானியை அழைத்து குண்டூசி கம்பெனிக்கு எம்டி ஆக்கப் பார்க்கிறார் கேப்டன். இயக்குனர்கள் இருவரும் அப்புறம் பார்க்கலாம் என்று உதறிக் கொண்டு ஓடியிருக்கிறக்ர்கள்.

இது ஒருபுறமிருக்க மகனுக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகா, காஜல் என்று வலைவீசியிருக்கிறார்கள். நாக்கை துருத்தி இளைய கேப்டன் கொடுத்திருக்கும் போஸைப் பார்த்தால் பச்சைக்குழந்தை கதறி அழும். இந்தப் பச்சைக்கிளிகள் கதி என்னாகும்?

கொஞ்சம் கருணை காட்டுங்க கேப்டன்.

Comments