'பிரபுதேவா நீங்க எதுக்கு சென்னைக்கு போறீங்க?'!!!

Wednesday,13th of June 2012
மும்பை::பிரபுதேவா இயக்கத்தில் வெளியான இரண்டாவது இந்திப் படம் ரவுடி ரத்தோருக்கு ஏக வரவேற்பு. இந்த வாரம் அந்தப் படத்தின் வசூல் ரூ 100 கோடியை எட்டிவிட்டதாம்.

அக்ஷய் குமார் - சோனாக்ஷி சின்ஹா நடித்த இந்தப் படம் இரண்டாவது வாரத்தில் மட்டும் ரூ 22 கோடி ஈட்டியுள்ளது.

இதன் மூலம் ரூ 100 கோடி வசூல் பட இயக்குநர்கள் பட்டியலில் பிரபுதேவா இடம்பெற்றுவிட்டார்.

இதுகுறித்து பிரபல இந்திப் பட விமர்சகர் தரண் ஆதர்ஷ் கூறுகையில், "மல்டிப் ப்ளெக்ஸ், ஒற்றைத் திரை அரங்குகள் என்ற பேதமின்றி, எங்கும் நல்ல வசூலைப் பெற்று வருகிறது ரவுடி ரத்தோர். இந்த வார இறுதி நிலவரப்படி ரூ 101.5 கோடி வசூல் குவிந்துள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏஆர் முருகதாஸ், சித்திக் ஆகியோருக்குப் பின் ரூ 100 கோடி வசூலைக் குவித்த படம் தந்த மூன்றாவது தென்னிந்திய இயக்குநர் பிரபு தேவாதான்.

ஏற்கெனவே இவர் சல்மான்கானை வைத்து இயக்கிய வான்டட் படமும் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், பிரபு தேவாவைத் தேடி பாலிவுட் வாய்ப்புகள் குவிகின்றனவாம். தமிழ், தெலுங்கிலும் ஓயாமல் அழைப்பு வந்தவண்ணம் உள்ளதாம். இதுபற்றிக் கேள்விப்பட்ட அக்ஷய் குமார் பிரபுதேவாவிடம் சொன்னது, "ஏன் நீங்க சென்னைக்குப் போறீங்க... மும்பையிலேயே செட்டிலாயிடுங்க", என்றாராம்.

பிரபுதேவாவுக்கும் அந்த யோசனை பலமாகவே இருக்கிறதாம்!

Comments