மீண்டும் நடிக்க வந்தார் பூர்ணிமா பாக்யராஜ்!!!

Wednesday, June, 06, 2012
மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் பாக்யராஜ் மனைவியும், எண்பதுகளில் முன்னணி நாயகியாகத் திகழ்ந்தவருமான பூர்ணிமா.

பயணங்கள் முடிவதில்லை, கிளிஞ்சல்கள், விதி, டார்லிங் டார்லிங் டார்லிங், தங்கமகன் உள்பட ஏராளமான வெள்ளிவிழாப் படங்களில் நடித்து முதலிடத்தில் இருந்தவர் பூர்ணிமா (ஜெயராம்).

முந்தானை முடிச்சுக்குப் பிறகு இயக்குநர் பாக்யராஜை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அதன் பிறகு ஏராளமான வாய்ப்புகள் வந்தும் நடிக்க மறுத்துவிட்டார். கணவரின் படங்களில் மட்டும் உடை அலங்கார நிபுணராகப் பணியாற்றினார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் பூர்ணிமா.

சுசீந்திரன் இயக்கும் ஆதலால் காதல் செய்வீர் என்ற புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பூர்ணிமா பாக்யராஜ். இப்படத்தில் புதுமுகம் சந்தோஷ் என்பவர் கதாநாயகனாகவும், வழக்கு எண் 18/6 புகழ் மனிஷா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.

இந்தப் பாத்திரத்துக்கு இந்தத் தலைமுறை ரசிகர்கள் பார்த்திராத நடிகையை நடிக்க வைக்க சுசீந்திரன் முயற்சித்தாராம். பூர்ணிமாவிடம் இதுகுறித்துப் பேசி சம்மதம் வாங்கியுள்ளார்.

இதற்கு முன் ஒரு சமையல் எண்ணெய் விளம்பரத்தில் மட்டும் கணவருடன் நடித்திருந்தார் பூர்ணிமா என்பது குறிப்பிடத்தக்கது.

Comments