பிரேம்ஜியுடன் காதலா? பியா பதில்!!!

Monday, 25th of June 2012
சென்னை::பிரேம்ஜியுடன் காதலா என கேட்டதற்கு பதில் அளித்தார் பியா. கோவா, பொய் சொல்லப் போறோம், கோ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பியா. இவருக்கும் சென்னை 28, கோவா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் காமெடி நடிகர் பிரேம்ஜிக்கும் காதல் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரேம்ஜி குறிப்பிடும்போது, ‘நானும் பியாவும் லவ் செய்கிறோம்' என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி பியா கூறியதாவது:

இதெல்லாமே ஏப்ரல் மாதம் முட்டாள் தினத்தன்றுதான் தொடங்கியது. அப்போது தனது இன்டர்நெட் பக்கத்தில் என்னை காதலிப்பதாக பிரேம்ஜி குறிப்பிட்டதால் வந்த வினை. உடனடியாக இதை மாற்றிக்கொள்ளும்படி அவரிடம் கூறினேன். ஆனால் அதற்குள் இதுபற்றி எல்லோரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். எங்களுக்குள் காதல் என்பது பொய். அதில் உண்மை இல்லை. இதை வெங்கட்பிரபுவிடம் கூறினேன். இந்த பிரச்னையில் நான் பலிகடா ஆகிவிட்டேன்.

தமிழில் தற்போது ‘சட்டம் ஒரு இருட்டறை', மலையாளத்தில் ‘மாஸ்டர்ஸ்' மற்றும் இந்தி படமொன்றில் நடித்து வருகிறேன். ‘தளம்' என்ற படத்தில் பாரம்பரியம்மிக்க பிராமணப் பெண்ணாக நடிக்கிறேன். நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் தேர்வு செய்தே ஒப்புக்கொள்கிறேன்.

Comments