கார்த்திகா - மேலும் ஒரு படத்திலிருந்து விலகினார்

Friday, ,June, 08, 2012
கோ படத்துக்குப் பிறகு கார்த்திகாவை தமிழில் பார்க்கவே முடியவில்லை. சுந்தர் சி. விஷாலை வைத்து இயக்கும் புதிய படத்தில் கார்த்திகாவைதான் முதலில் ஒப்பந்தம் செய்தார்.

அவறிடம் சுந்தர் சி. கதை சொல்லும் போது படத்தில் ஒரு கதாநாயகிதான் இருந்தார். கதை டெவலப் ஆன போது மேலும் ஒரு கதாநாயகி வரவே, இது சரி வராது என கார்த்திகா விலகிக் கொண்டார்.

அவர் கால்ஷீட் கொடுத்திருந்த இன்னொரு படம் சட்டம் ஒரு இருட்டறை ரீமேக். விஜய் தயாரிப்ப்பு விக்ரம் பிரபு ஹீரோ என்பதால் கால்ஷீட் தந்தார். இப்போது படத்திலிருந்து விக்ரம் பிரபு விலகிக் கொள்ள, எஸ்.ஏ.சி. புதுமுகத்தை ஒப்பந்தம் செய்ய முயன்று வருகிறார்.

புதுமுகம் எல்லாம் நமக்கு சரி வராது என்று கார்த்திகா படத்திலிருந்து கழன்று கொண்டுள்ளார். அதேபோல் இந்தப் படத்தில் ஆர்வமாக நடித்த ரீமா சென்னும் பேக்கப் செய்துவிட்டதாக கேள்வி.

Comments