
செல்வராகவன், பாலா படங்களில் எல்லாம் தனுஷ் தான் நடிப்பார் அது எனக்கு ஒத்து வராது என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
சிம்புவுக்கு தனுஷை வம்புக்கு இழுக்கவில்லை என்றால் தூக்கம் வராது போலும். அவரது வாலு படத்தில் தனுஷின் படிக்காதவன் படத்தில் வரும் வசனத்தை உல்டாவாக்கி பயன்படுத்தியுள்ளார். கேட்டால் அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிவிட்டார். இந்நிலையில் தனுஷை மீண்டும் வம்புக்கு இழுத்துள்ளார்.
இயக்குனர்கள் செல்வராகவன், பாலா ஆகியோர் படங்களில் நடிக்க விருப்பமில்லையா என்று கேட்டதற்கு அவர் கூறுகையில்,
அவர்கள் படங்களில் நடிக்க விருப்பமில்லை. அவர்களின் படங்களில் வரும் கதாபாத்திரங்கள் சீரியசாக இருக்கும். தனுஷ் தான் அந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிப்பார். அவர் நடிப்பவர் நான் மக்களை மகிழ்விப்பவன். எனக்கு தேசிய விருதோ, ஆஸ்கர் விருதோ வேண்டாம். ரஜினிகாந்த் எப்படி தளபதியில் நடித்தாரோ அதே மாதிரி நானும் அந்த மாதிரி படங்களில் நடிப்பதில் ஆட்சேபனையில்லை. அதனால் தான் வெற்றி மாறனின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளேன். நான் மக்களை மகிழ்விக்கும் மாஸ் படங்களில் நடிப்பதில் ஆர்வமுள்ளவன். என் படம் ஓடும் தியேட்டரில் கைதட்டல், விசில் பறக்க வேண்டும் என்றார்.
Comments
Post a Comment