தனுஷை சீண்டும் சிம்புவின் வாலு!!!

Thursday, June 07, 2012
இன்று தனது வாலு படத்தின் டீசரை வெளியிட்டிருக்கிறார் சிம்பு. நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. தீபாவளிக்கு படம் ரிலீஸ்.

தனுஷை சீண்டுவதை நிறுத்தியிருந்த சிம்பு இந்த டீசர் வழியாக மீண்டும் தனது சின்னப்புள்ளத்தனத்தை தொடங்கியிருக்கிறார்.

ஹன்சிகா சிம்புவைப் பார்த்து பேசும் வசனம் ஒன்று இந்த டீசரில் வருகிறது. ஒருசில பசங்களை பார்க்கப் பார்க்கதான் பிடிக்கும், உன்னை மாதிரி பசங்களை பார்த்த உடனே பிடிக்கும் என்கிறார் ஹன்சிகா சிம்புவிடம். திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் தனுஷ் ஸ்ரேயாவிடம், என்னை மாதிரி பசங்களை பார்த்த உடனே பிடிக்காது, பார்க்கப் பார்க்கதான் பிடிக்கும் என்பார். உன்னையெல்லாம் பார்க்க பார்க்கதான் பிடிக்கும், என்னை பெண்ணுங்களுக்கு பார்த்த உடனே பிடிக்கும் என சீண்டியிருக்கிறார் சிம்பு.

தேவையா இந்த வாலுத்தனம்?

Comments