
தமிழ் படங்களில் நடிக்க மறுப்பது ஏன்? என்பதற்கு பதில் அளித்தார் பிருத்விராஜ். மொழி, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் பிருத்விராஜ். அவர் கூறியதாவது: தமிழில் நல்ல கதை அம்சமுள்ள மொழி, அபியும் நானும் உள்ளிட்ட படங்கள் வந்தபோது உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். அதன்பிறகு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதை மறுத்துவிட்டேன். எண்ணிக்கைக்காக தமிழில் நடிக்க விரும்பவில்லை. அதிக படங்களில் நடிக்காவிட்டாலும் பரவாயில்லை மோசமான படங்களில் நடித்து பெயரை கெடுத்துக்கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். அதனால்தான் பல படங்களில் வாய்ப்பு வந்தபோதும் ஏற்கவில்லை.
மலையாளத்தில் உருமி படத்தை இயக்குவதாக சந்தோஷ் சிவன் கூறினார். வித்தியாசமான கதை. ஒப்புக்கொண்டேன். அப்படத்தை மலையாளத்தில் மட்டுமல்லாமல் பிறமொழியிலும் உருவாக்க எண்ணியபோது பைனான்ஸ் போதவில்லை. இதையடுத்து நானும் பட தயாரிப்பாளர் ஆனேன். இதை நண்பர்களிடம் சொன்னபோது பயமுறுத்தினார்கள். ஆனாலும் கதை மீதும் இயக்குனர் மீதும் இருந்த நம்பிக்கையில் தயாரிக்க முடிவு செய்தேன். இப்படத்தை இந்தி, ஆங்கிலத்திலும் கொண்டு வருவேன். தமிழிலும் படம் தயாரிப்பேன். ஆர்யா எனது நண்பர். அவர் கால்ஷீட் கொடுத்தால் நிச்சயம் தமிழில் தயாரிப்பேன். இவ்வாறு பிருத்விராஜ் கூறினார்.
Comments
Post a Comment