என் மகன் ரஜினி சார் ஆசியோடு நடிக்க வந்துள்ளான்: பிரபு பெருமிதம்!!!

Saturday, June, 02, 2012
தனது மகன் விக்ரம் பிரபு நிச்சயம் பெரிய நடிகர் ஆவார் என்று நடிகர் பிரபு நம்பிக்கை தெரிவி்த்துள்ளார்.

நடிகர் திலகத்தின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு கும்கி படத்தின் மூலம் ஹீரோவாகிறார். இந்நிலையில் தனது மகன் நிச்சயம் பெரிய நடிகராக வருவார் என்று இளைய திலகம் பிரபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

என் மகன் என்னைப் போன்றே குண்டாகத் தான் இருந்தான். ஆனால் கும்கி படத்திற்காக கடும் உடற்பயிற்ச்சி செய்து 25 கிலோ எடையை குறைத்துள்ளான். நான் இன்னும் கும்கி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று அவன் நடிப்பதைப் பார்க்கவில்லை. ஆனால் அவன் நிச்சயம் வெற்றி பெறுவான் என்பது எனக்கு தெரியும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எங்கள் குடும்பத்தில் ஒருத்தர். அவர் விக்ரமை சின்ன குழந்தையில் இருந்தே பார்த்து வருகிறார். கும்கி பட வாய்ப்பு கிடைத்தவுடன் விக்ரம் ரஜினியை சந்தித்து ஆசி பெற்றான் என்றார்.

கும்கி படத்தை பார்த்த ரஜினி விக்ரம் பிரபுவை பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments