அஜீத் - ஆர்யா படம் தொடங்கியாச்சு!!!

Friday,June,01,2012
அஜீத் - ஆர்யா முதல் முறையாக இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு சத்தமில்லாமல் தொடங்கிவிட்டது.

விஷ்ணுவர்தன் இயக்கும் இந்த மெகா பட்ஜெட் படத்தை ஏ எம் ரத்னம் மேற்பார்வையில் ஸ்ரீசத்ய சாய் மூவீஸ் தயாரிக்கிறது.

படத்தின் முதல்நாள் ஷூட்டிங், ஏ எம் ரத்னம் புதிதாகக் கட்டியுள்ள விஸ்வரூப ஸ்ரீஷிர்டி சாய் பாபா மந்திரில் பூஜையுடன் தொடங்கியது.

நடிகர் அஜீத், ஆர்யா, இயக்குநர் விஷ்ணுவர்தன், எழுத்தாளர்கள் சுபா, எடிட்டர் நானி, காமிராமேன் பிஎஸ் வினோத், காஸ்ட்யூம் டிசைனர் அனுவர்தன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

வந்திருந்த அனைவரையும் ஏ எம் ரத்னம், தயாரிப்பாளர் ரகுராம் வரவேற்றனர்.

படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக நாளை மும்பையில் தொடங்குகிறது. படத்தின் நாயகிகள் நயன்தாரா, டாப்ஸி ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர்.

தமிழ் சினிமாவின் மிகப் பிரமாண்ட படமாக இது அமையும் என தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் நம்பிக்கையுடன் கூறினார்.

Comments