




புதுடெல்லி::நடிகையும், பிரபல மாடல் அழகியுமான பூனம் பாண்டே, கடந்த ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதையொட்டி நிர்வாண போஸ் கொடுப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தனது முடிவை பூனம் பாண்டே மாற்றி கொண்டார். எனினும் அவ்வப்போது இணைய தளங்களில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் ஐபிஎல் 20,20ல் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிக்காக, இப்போது பூனம் பாண்டே தனது டுவிட்டரில் நிர்வாண போஸ் கொடுத்துள்ளார். மேலாடையின்றி தரையில் அவர் படுத்திருப்பது போன்ற காட்சி வெளியாகி பரபரப்பை உருவாக்கி உள்ளது. இதுகுறித்து பூனம் பாண்டே கூறுகையில், ÔÔகொல்கத்தா அணியின் வெற்றிக்காக எனது ஆடைகளை துறந்துள்ளேன். இது மார்ஃபிங் செய்யப்பட்ட படம் கிடையாது. எனது வீட்டிலேயே எடுக்கப்பட்ட படம்தான். இந்த விஷயம் எனது பெற்றோருக்கும், நண்பர்களுக்கும் முதலில் தெரியாது. படம் வெளியானதும் அவர்கள் கோபப்படுவார்கள். கடைசியில் அவர்களை சமாளித்து விடுவேன்ÕÕ என்றார்.
Comments
Post a Comment