சூர்யாவுக்கு 80 லட்ச ரூபாய் மதிப்புடைய ஏ7 ஸ்போர்ட்பேக் காரை பரிசாக கொடுத்திருக்கிறதாம் ஆடி!!!

Wednesday,20th of June 2012
சென்னை::நடிகர் சூர்யாவுக்கு 80 லட்ச ரூபாய் மதிப்புடைய ஏ7 ஸ்போர்ட்பேக் காரை பரிசாக கொடுத்திருக்கிறதாம் ஆடி.

சினிமா நட்சத்திரங்களுக்கு கார்களை பரிசாக கொடுத்து தங்களது பிராண்டை எளிதாக பிரபலப்படுத்திக் கொண்டு வருகின்றன சொகுசு கார் நிறுவனங்கள்.

பாலிவுட் நட்சத்திரங்களுக்கு மட்டும் இதுவரை விலையுயர்ந்த கார்களை பரிசளித்து வந்த ஆடி நிறுவனம் தற்போது கோலிவுட்டின் ஹாட் ஹீரோ சூர்யாவுக்கு ஏ7 ஸ்போர்ட்பேக் காரை பரிசாக கொடுத்திருப்பதாக மோட்டார் விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆடியின் டாப் வேரியன்ட் மாடல்களில் ஒன்றான ஏ7 ஸ்போர்ட்பேக் பிரிமியம் செடான் காரை சொகுசு கப்பல் என்று கூட அழைக்கின்றனர் ஆட்டோமொபைல் துறையினர். காரில் அனைத்து சொகுசு வசதிகளும் இருக்கிறது. டீசல் மற்றும் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட இரு மாடல்களில் கிடைக்கிறது.

இதில், பொருத்தப்பட்டிருக்கும் 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 300 பிஎச்பி ஆற்றலையும், 3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்சின் அதிகபட்சம் 245 பிஎச்பி ஆற்றலையும் வாரி இறைக்கும் திறன் கொண்டது. 12 விதமான கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

பகல் நேர ரன்னிங் விளக்குகளுடன் ஆடி கார்களுக்கே உரிய தனித்துவமான வடிவமைப்புடன் இருக்கும் ஏ7 உட்புறம் லெதர் இருக்கைகள் அழகூட்டுகிறது. காரின் வேகத்தை பொருத்து கதவுகள் தானாக மூடிக்கொள்ளும் தொழில்நுட்பம் இருக்கிறது.

இதுதவிர, உட்புறம் ஓர் அறையில் உட்கார்ந்திருப்பது போன்ற சுகத்தை தரும் வகையில் விசாலமான இட வசதியை வழங்குகிறது. ஆடி ஏ7 கார் சூர்யாவுக்கு பரிசாக கொடுக்கப்பட்டிருப்பதால், இதுவரை அவர் வைத்திருந்த ஆடி க்யூ7 எஸ்யூவியை தனது தம்பி கார்த்தியிடம் கொடுத்து விட்டாராம்.

Comments