3rd of June,Sunday,2012
இது இசைஞானி ஸ்பெஷல்... ஸ்டில்ஸ் ரவி என்ற புகழ்மிக்க சினிமா ஸ்டில் கலைஞரிடமிருந்து சுட்ட புகைப்படங்கள்!!!

பாடல்கள் மூலம் பட்டிதொட்டி எங்கும் இசை விருந்து கொடுத்தவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி தொடங்கி இன்று வரை ரசிகர்களை இசை மழையால் நனைத்துக்கொண்டிருக்கிறார். இசைஞானியின் 68 வது பிறந்த நாள் விழா இன்று சென்னையில் பத்திரிகையாளர்களின் முன்னிலையில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் ஆர். கே. செல்வமணி, மனோஜ்குமார் , கெளதம் வாசுதேவ மேனன், தயாரிப்பாளர் டி.சிவா, நடிகர் அசோக், இறையன்பு ஐ.ஏ.எஸ்., கவிஞர் முத்துலிங்கம் ஆகியோ் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் இளையராஜாவிற்கு என்றே இணையதளம் ஒன்றை துவங்கியுள்ளார். இந்த இணையதளத்தில் இசை பற்றிய சந்தேகங்க கேள்விகளுக்கு இளையராஜா பதில்; சொல்லவிருக்கிறார்.
ஆர்.கே.செல்வமணி.
நான் செம்பருத்தி படத்திற்கு 7 பாடல்கள் இசையமைக்க வேண்டியிருந்தது, அதற்காக அவரை பலமுறை தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது. அவருக்கு இருந்த பிசியான நேரத்தில், ஒரு மணிநேரத்தில் ஏழு பாடல்களையும் முடித்து கொடுத்துவிட்டார். எனக்கு அப்பா போல அவர். அவருக்காக தொடங்கும் இந்த இணையதளம் மிகபெரிய உதவியாக இருக்கும்.
டி. சிவா
இளையராஜா சாரின் வாழ்த்தில் வளர்ந்தவன் நான். என் திருமணத்தில் தொடங்கி யுவனை அறிமுகபடுத்த வாய்ப்பு கொடுத்தார். இப்படி என் எல்லா வளர்ச்சியிலும் இளையராஜாவிற்கு மிகபெரிய பங்கு உண்டு. ஆரோக்கியத்துடனும் நலமோடு வாழ இறைவனை வேண்டிகொள்கிறேன். \
கவிஞர் முத்துலிங்கம
1973 ல் வெளிவந்த பொண்ணுக்கு தங்க மனசு படத்தில் இசையமைப்பாளர் ஜி.கே. வெங்கடேஷ் அவர்களுக்கு உதவியாளராக இருந்தவர் இளையராஜா. தஞ்சாவூர் சீமையிலே என்று நான் எழுதிய முதல் பாடலுக்கு மெட்டமைத்தவர். ஒரு கவிஞனுக்கு இதைவிட பெருமை வேற என்னவாக இருக்க முடியும். நூற்றாண்டுகாலம் பேருடனும், புகழுடனும் நோயின்றி வாழ இறைவனை வேண்டிகொள்கிறேன்.
இறையன்பு ஐ.ஏ.எஸ்.( பாடலாசிரியர்)
இன்றைய நாளில் இளையராஜாவின் இணையதளம் உருவாவது பெரும் மகிழ்ச்சியாகவுள்ளது. வளர்சியடைபவர்கள் வயோதிகர்கள் ஆவதில்லை. இந்த வகையில் இளையராஜாவும் இளமையோடு இருக்கிறார். இளையராஜா இந்த இசையால் , கருணையால், பரிவால் நிரம்பி வழிகிறார்.உலகமெங்கும் இசையை பரவ செய்த இளையராஜா இன்னும் பலாண்டு காலம் வாழ வாழ்த்தி விடை பெறுகிறேன்.\
இயக்குனர் கெளதம் மேனன
ராஜா சார் பிறந்தநாளுக்கு எனக்கு கிடைத்த பரிசு 8 .அத்தனையும் பட்டு பரிசு, நான் இயக்கி வெளிவரவுள்ள நீ தானே என் பொன் வசந்தம் படத்தில் அவரோடு வேலை பார்த்ததில் 10 படம் செய்த அனுபவத்தை பெற்று தந்தது. பாடல்களில் எத்தனையோ வகைகள் உண்டு, இந்த பாடல்கள் எந்த வகையிலும் இல்லாமல் இளையராஜாவை புது அடையாளம் காட்டும் விதமாக அமைந்துள்ளது. அவரோடு பணிபுரிந்த இந்த நாட்கள் இசையின் மீது எனக்கு புது தாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இசைபயணம் என் படத்தின் புது அத்தியாயத்தை தொடங்கும் என நம்புகிறேன்.
மனோஜ் குமார்.
எங்கள் ஊர் மண் வாசத்தை உலகுக்கு எடுத்து சென்ற இசைகலைஞன் இளையராஜா. பாரதிராஜா சார்பிலும், என் ஆத்தா சின்னதாயி ஆசிர்வாதத்திலும் பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்துகிறேன்.
கார்த்திக் ராஜா
இசையை எனக்கு புரிய வைத்தவர் என் தந்தை இளையராஜா என் சின்ன வயசுல ஒரு படத்திற்காக நான் போட்ட பின்னணி இசையை கேட்டுவிட்டு இது அம்மா பயனுக்கான இசை. காதலுக்கான டியுன் அல்ல அது உனக்கு வரும் போது புரியும் என்றார். இப்படியாக உறவுமுரைகளுக்கென்று ஒரு இசை உண்டு என்று அன்று தான் தெரியும். இப்படிபட்ட இசையை கொடுப்பவர் என் அப்பா தன என்று நினைக்கிறேன்.
பவதாரணி
நான் அப்பாவை மிக அதிகமாக நேசிக்கிறேன். அப்பாவிடம் உரிமையோடு அதிகமாக சண்டைபோடுவதும் நான்தான். அப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
இளையராஜா.
பொதுவா நான் என் பிறந்தநாளை கொண்டாடுவது இல்லை. இந்த வருடம் இந்த நாளில் என்னுடைய இணையதளம் துவங்குவதில் எனக்கு மகிழ்ச்சி. பொதுவா இணையதளம் என்பதில் எனக்கு உடன் பாடில்லை. இன்னைக்கும்தளம் என்று வேண்டுமானால் சொல்லலாம். என் என்றால் உங்களையும் , எனையும் இணைக்கும் தளம். எனக்கும் தெரிந்ததை இசை மீது ஆர்வம் உள்ளவர்கள் அவர்களின் சந்தேகங்களுக்கு , கேள்விகளுக்கு பதில் சொல்ல விரும்புகிறேன். எனக்கு தெரிந்ததை என்னோடு போக விரும்பவில்லை. மற்றவர்களுக்கும் சொல்லிவிட்டு போக நினைக்கிறேன். இதன் மூலம் உங்களை சந்திக்கவுள்ளேன், விளக்கம் சொல்ல உள்ளேன் உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவும் ஆர்வமாக உள்ளேன். வெகு விரைவில் என்னுடைய இணையதளத்தின் முகவரி, கேள்வி அனுப்பும் முறை இப்படி எல்லாவற்றையும் விரைவில் தெரிவிக்கிறேன் என்று பேசி முடித்தார் இளையராஜா...
தமிழ் திரை உலகில் பிரபல இசையமைப்பாளர்களான எம்.எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்திக்குப் பிறகு இசையால் ஆதிக்கம் செய்தவர் இசைஞானி இளையராஜா ஆவார். ஞானதேசிகன் என்ற இயற்பெயரைக் கொண்ட இளையராஜா, சினிமாவில் வருவதற்கு முன்பு தனது சகோதரர்களுடன் 'பாவலர் பிரதர்ஸ்' என்ற பெயரில் இசைக்குழு நடத்தி வந்தார். அந்த அனுபவத்தைக் கொண்டு சினிமாவில் நுழைந்தார். சினிமாவிற்கு வருவதற்கு முன்பு இயக்குநர் பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா ஆகியோருடன் நட்பு கொண்டிருந்தார். இந்த மூவரும் அப்போது சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாய் இருந்தார்கள். வாய்ப்பு கிடைத்தது, அவரவர் துறையில் சாதிக்க ஆரம்பித்தனர். இந்த கூட்டணியில் இவரது பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாயின. சினிமா உலகில் பல திறமையான பாடகர்களை அறிமுகப்படுத்தியதில் இசைஞானிக்கு முக்கிய பங்குண்டு. அமரத்துவம் பெற்ற பல பாடல்கள் இவரது இசையமைப்பில் வெளிவந்துள்ளன. வயது முதிர்வின் காரணமாக படங்களில் இசையமைப்பதை குறைத்துக் கொண்ட இசைஞானி, இதுவரை நான்கு தேசிய விருதுகளை வென்றிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட 5 மொழிகளில் இசையமைத்திருக்கிறார். இசைஞானி இளையராஜாவிற்கு இன்று 68-வது பிறந்த நாளாகும். இசைஞானிக்கு பூந்தளிரின் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

Comments
Post a Comment