
சென்னை::சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி இணைந்து நடித்த படம், ‘பாசமலர்’.
1961ல் வெளியான இந்த படம் இன்றும் அண்ணன் தங்கை பாசத்துக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது. கண்ணதாசனின் பாடல்களும், ஆருர் தாஸின் வசனங்களும் என்றைக்கும் மறக்க முடியாதவை. ஏ.பீம்சிங் இயக்கிய இந்தப் படத்தை இப்போது மீண்டும் ரிலீஸ் செய்ய உள்ளனர்.
டிஜிட்டல் மற்றும் இன்றைய நவீன ஒலிப்பதிவு நுட்பங்களுடன் கருப்பு, வெள்ளையில் மெருகேற்றப்பட்டு வெளியாக இருக்கிறது. இதன் உரிமையை அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்ற தலைவர் கே.வி.பூமிநாதன் வாங்கியுள்ளார். 197 நிமிடங்கள் ஓடும் இப்படம், அப்படியே புதுப்பிக்கப்படுகிறது.
சிவாஜி கணேசனின் ‘கர்ணன்’ படம் மீண்டும் ரிலீசானது. அந்த வரிசையில் ‘பாசமலர்’ வருகிறது. மேலும், சிவாஜி கணேசன் நடித்த ‘புதிய பறவை’, ‘வசந்த மாளிகை’, ‘தெய்வ மகன்’ போன்ற படங்களும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று சிவாஜி ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
Post a Comment