காந்திக்குப் பின் மிகச் சிறந்த இந்தியர் 50 பேர் பட்டியலில் ரஜினி!!!

Wednesday, June, 06, 2012
தேசப் பிதா என கொண்டாடப்படும் காந்தியடிகளுக்குப் பிறகு இந்தியாவின் மிகச் சிறந்த மனிதர் யார் (Greatest Indian after Mahatma Gandhi)?

இந்தத் தலைப்பில் ஒரு வாக்கெடுப்பை நடத்தி வருகிறது ஹிஸ்டரி மற்றும் சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சிகள். அவுட்லுக் பத்திரிகை ஆதரவுடன் இந்த வாக்கெடுப்பு நடக்கிறது.

தலைவர்களின் சர்வதேச புகழ், மக்கள் மீதான அவர்களின் தாக்கம், உதாரணத்தன்மை என பல விஷயங்களின் அடிப்படையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

பிபிசியின் வாக்கெடுப்பு விதிகளின் அடிப்படையில் நடத்தப்படும் இதில் 50 இந்திய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அண்ணல் அம்பேத்கர், சர்தார் வல்லபாய் பட்டேல், ஜவஹர்லால் நேரு, அன்னை தெரசா, அன்னை இந்திரா காந்தி, என தலைவர்களும் மனித நேய மாந்தர்களும் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் நமது சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

ஒவ்வொரு நபரும் தனது பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தி 10 தலைவர்களை வரிசைப்படுத்தலாம். அதாவது 10 வாக்குகளை அளிக்கலாம். இதுவரை 215332 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதன் அடிப்படையில், இப்போது 12வது இடத்தில் உள்ளார் ரஜினி. முதலிடத்தில் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளார். வாக்குகளின் அடிப்படையில் இந்த நிலை மாறிக் கொண்டிருக்கும்.

Comments