அஜீத் தினமும் 5 மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறார்: உடம்பை குறைக்க முடிவு!!!

Wednesday,27th of June 2012
சென்னை:: அஜீத்தின் பில்லா-2 படப்பிடிப்பு முடிந்துள்ளது. இப்படத்துக்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளது. அடுத்த மாதம் (ஜூலை) 13-ந்தேதி பில்லா-2 ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்துக்கு வந்துள்ளார் அஜீத். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படப்பிடிப்பு கடந்த 18-ந்தேதி பெங்களூரில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஆர்யாவும் நடிக்கிறார். நாயகிகளாக நயன்தாரா, டாப்ஸி நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு பெங்களூர் புறநகர் பகுதியான ஹெண்ணுவில் நடந்தபோது ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அத்துடன் அஜீத் காரை மறித்தும் ரசிகர்கள் ரகளை செய்தனர்.

இதையடுத்து படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்டது. இந்த படத்தில் அஜீத்தை மங்காத்தாபோல் இல்லாமல் மிகவும் இளமையாக காட்டப் போகிறாராம் விஷ்ணுவர்த்தன். இதற்காக தலைமுடி காஸ்ட்யூம் என எல்லாவற்றையும் இளமைத்தனமாக மாற்றியுள்ளாராம்.

அத்துடன் உடல் எடையை குறைக்கும்படியும் கேட்டுக் கொண்டாராம். இதனை ஏற்று அஜீத் கடந்த 7 நாட்களாக ஜிம்முக்கு செல்கிறார். தினமும் 5 மணி நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து விஷ்ணுவர்த்தன் கூறும்போது, தீவிர உடற்பயிற்சி செய்கிறார். இதற்கான பலன் ஆச்சரியப்படும் வகையில் இருக்கும் என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Comments