
சென்னை:சொந்த வாழ்க்கையை சினிமாவாக எடுப்பதாக அறிவித்ததிலிருந்து எனக்கு 45 கொலை மிரட்டல்கள் வந்துவிட்டன, என்றார் நடிகை சோனா.
கவர்ச்சி நடிகை சோனா தனது சொந்த வாழ்க்கையை சினிமாவாக எடுக்கிறார். இந்த படத்துக்காக கதை, திரைக்கதையை அவரே எழுதுகிறார். திரையுலகில் நடிகர்கள், தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட அனுபவங்கள், கசப்பான சம்பவங்களை படமாக்கப் போகிறாராம்.
இதுகுறித்து சோனா கூறுகையில், "எனது வாழ்க்கையை ஏற்கனவே பத்திரிக்கையில் தொடராக எழுதினேன். அடுத்து படமாக எடுக்கப்போகிறேன். திரையுலகின் இருட்டு பக்கங்களை இந்த படம் வெளிச்சத்துக்கு கொண்டுவரும். நிறைய சினிமா பிரபலங்களின் ரகசியங்களும் வெளிப்படுத்தும்.
என் வாழ்க்கையை படமாக்கப் போவதாக நான் அறிவித்த உடனேயே எனக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. இதுவரை 45 மிரட்டல்கள் வந்துள்ளது. ஆனால் இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.
எனது ஒவ்வொரு பகுதி வாழ்க்கையையும் பிரதிபலிக்கிற கேரக்டர்களில் நடிப்பதற்காக பொருத்தமான நடிகைகள் தேர்வு நடக்கிறது.
ஒரு பாடல் காட்சியில் 14 முன்னணி நடிகர்களை ஆட வைக்கவும் திட்டமிட்டுள்ளேன். கதாநாயகனாக பிரபல நடிகர் ஒருவரும் நடிக்கிறார்," என்றார்.
இந்தப் படத்துக்கு ஒரு சிரிப்பின் அழுகை என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளார் சோனா.
கதை, மற்றும் திரைக்கதையை சோனா எழுதுகிறார். ஒரு நடிகையின் வாக்குமூலத்தை இயக்கிய ராஜ்கிருஷ்ணா, இந்தப் படத்தை இயக்குகிறார் எனத் தெரிகிறது.
Comments
Post a Comment