
சென்னை::சென்னை வடபழனியில் உள்ள கமலா சினிமாஸ் திரையரங்கில் முழுமையான டிஜிட்டல் தன்மையில் திரைப்படங்களை பார்த்து ரசிக்கும் வகையில் டிஜிட்டல் சினிமாவுக்கு ஏற்ற டிசிஐ புரெஜக்ஷன் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.மேலும் 3டி படங்களை துல்லியமாக பார்த்து ரசிப்பதற்கு ஏற்ற வகையில் 3டி புரெஜக்ஷன் அமைப்பும் நிறுவப்பட்டுள்ளது.
இந்த 3D வசதியை இன்று (ஜூன் 29) பெப்சி தலைவரும், இயக்குநருமான அமீர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமீர், "ஒரு படம் வெளியானவுடனே காலையிலேயே முதல் காட்சி பார்ப்பதுதான் என்னுடைய வழக்கும். மதுரையில் இருந்தவரை அப்படிதான் பார்த்துகொண்டிருந்தேன். சென்னைக்கு வந்தவுடன் இரவு காட்சியை பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. என்னதான் வீட்டில் பெரிய டிவியில், ஹோம் தியேட்டர் முதலிய வசதியில் படம் பார்த்தாலும், திரையரங்குக்கு வந்து பார்க்கும் அனுபவே தனி. அந்த அனுபவத்தை எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்க முடியாது." என்றார்.
பிறகு இன்று வெளியான 'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்' 3D படத்தை சிறிது நேரம் பார்த்த அமீர்,கமலா திரையரங்க உரிமையாளர்களிடன், நானும் என்னுடைய அடுத்தப் படத்தை 3Dயில் எடுக்கலாமா என்று நினைக்கிறேன். என்று தனது 3D பட ஆசையை கூறினார்.
Comments
Post a Comment