தூம் 3-யில் ரஜினி?!!!

Friday, 22nd of June 2012
சென்னை::இந்தி திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாக இருக்கிறது 'தூம் 3'தூம்' வரிசை படங்களில் வில்லன் வேடம் தான் பிரபலம்.

முதல் பாகத்தில் ஜான் ஆபிரஹாம், இரண்டாம் பாகத்தில் ஹிரித்திக் ரோஷன் ஆகியோரைத் தொடர்ந்து, தற்போது மூன்றாம் பாகத்தில் அமீர்கான் வில்லனாக நடிக்க இருக்கிறார்.

யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் அமீர் கான், அபிஷேக் பச்சன், கத்ரீனா கைப் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இப்படத்தில் ஒரு சிறு வேடம் ஒன்று இருக்கிறதாம். அதில் ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறாராம் அமீர்கான்.

அவரை எப்படியாவது நடிக்க வைத்து விட வேண்டும் என்று முனைப்பில் இருக்கிறாராம் அமீர்கான். ஏற்கனவே ஷாருக்கானின் 'ரா.ஒன்' படத்தில் ரஜினியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நடிக்க முடியாமல் போனது. ஆனால், அப்படத்தில் 'எந்திரன்' படத்தில் உபயோகப்படுத்திய கிராபிக்ஸ் காட்சியை பயன்படுத்தினார்கள்.

'தூம் 3' படத்தில் ரஜினி நடிக்க சம்மதித்தால் ரஜினி, அமீர்கான், அபிஷேக் பச்சன், கத்ரீனா என இந்தியா முழுவதும் பிரம்மாண்ட ஓப்பனிங் இருக்கப் போவது உறுதி.

Comments