


சென்னை::சகுனி' படத்தின் தெலுங்கு உரிமை அஜித் நடித்த "பில்லா 2' வின் தெலுங்கு உரிமையை விட அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது. கார்த்திக்கு தான் நடித்த 6வது படத்திலேயே இவ்வளவு பெரிய நட்சத்தர அந்தஸ்து கிடைத்திருப்பது, திரையுலகத்தினரை புருவம் உயர்த்தச் செய்துள்ளது. தொடக்கத்தில் இரண்டு படங்களும் ஒரு நாள் இடைவெளியில், அதவாது ஜூன் 21, 22 ஆகிய தேதிகளில் வெளியாவதாக இருந்தன. ஆனால் கடந்த வெள்ளியன்று தணிக்கைக் குழுக்கு சென்ற "பில்லா 2' திரைப்படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்தது. அத்துடன் படத்திலிருந்து ஒருசில வன்முறை காட்சிகளும் நீக்கப்பட்டன. இதனால் "பில்லா 2' திரைப்படத்தின் வெளியீடு எந்தவித அறிவிப்பின்றி தள்ளிப்போயுள்ளது. ஆனால் சகுனி திரைப்படம் திட்டமிட்டபடி ஜூன் 22ம் தேதி திரைக்கு வர இருக்கிறது-
Comments
Post a Comment