
துபாய்::அமீரக தமிழ்ச் சங்கம் நடத்திய நம்பிக்கை ஸ்வரங்கள் 2012 கடந்த மாதம் 24ம் தேதி துபாயில் நடந்தது.
அமீரகத் தமிழ் சங்கம் கடந்த 2010ல் இருந்து ஆண்டு தோறும் மாற்றுத்திறனாளிகளுக்காக நம்பிக்கை ஸ்வரங்கள் என்ற கலை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி கடந்த மாதம் 24ம் தேதி மாலை 7 மணிக்கு துபாயில் உள்ள இந்தியன் ஹை ஸ்கூலில் உள்ள ஷேக் ராஷித் அரங்கில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கோலிவுட் நடிகை நமீதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். குத்து விளக்கேற்றி தமிழ்த் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டது. அமீரக தமிழ்ச் சங்க குழந்தைகளின் நடன நிகழ்ச்சி நடந்தது. மாற்றுத்திறனாளிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி அரங்கில் இருந்தவர்களை நெகிழச் செய்தது. மேலும் சூப்பர் சிங்கர்ஸ் அஜேஷ், சந்தோஷ், சத்ய பிரகாஷ், பூஜா, பிரசன்னா, பார்வையற்ற திருமதி சுசீலா ஆகியோர் இன்னிசை நிகழ்ச்சியும், மானாட மயிலாட கோகுல்நாத்தின் வெரைட்டி நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.
சுசீலாவின் பாடல்களைக் கேட்டு அங்கிருந்தவர்களின் கண்கள் கலங்கிவி்ட்டன. நிகழ்ச்சிகளை சங்க உறுப்பினர்களோடு சேர்ந்து இப்படிக்கு ரோஸ் தொகுத்து வழங்கினார்.
Comments
Post a Comment