
இந்த வருடத்தில் 2 தமிழ் படங்களிலாவது நடிக்க வேண்டும் என்பது தான் தமன்னாவின் தற்போதைய ஆசை.
நடிகை தமன்னாவுக்கு தற்போது தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஏன் என்றால் காதல் என்பேன் என்ற ஒரு படத்தில் மட்டுமே அவர் நடித்து வருகிறார். ஆனால் தெலுங்கு பட உலகில் அவர் செம்ம பிசி. கை நிறைய படங்கள் வைத்துள்ளார். இந்நிலையில் தமன்னாவின் பார்வை கோலிவுட் பக்கம் திரும்பியுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில்,
என்னை நடிக்கத் தெரிந்தவளாக காட்டியதே தமிழ் படங்கள் தான். தெலுங்கில் கொஞ்சம் பிசியாக இருந்ததால் தமிழ் படங்களுக்கு ஒரு குட்டி பிரேக் விட்டேன். தற்போது தமிழ் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தீர்மானித்துள்ளேன். இங்கு தான் புதுமையை விரும்பும் ரசிகர்கள் உள்ளனர். இந்த ஆண்டுக்குள் 2 தமிழ் படங்களிலாவது நடித்து விடுவேன் என்றார்.
Comments
Post a Comment