வரலாறு கன்னட ரீமேக்கிற்கு இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மானுக்கு ரூ.1.5 கோடி சம்பளம்!!!

Monday, June, 04, 2012
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கன்னட படம் ஒன்றுக்கு இசையமைக்க ரூ.1.5 கோடி சம்பளம் கொடுக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

இயக்குனர் மணிரத்னம் இசை உலகிற்கு அறிமுகப்படுத்திய பொக்கிஷம் ஏ.ஆர்.ரஹ்மான். அவர் மொழிகளைத் தாண்டி, நாடுகளைத் தாண்டி இசையமைத்து வருகிறார். தனது ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக 2 ஆஸ்கார் விருதுகள் வாங்கி உலக அரங்கில் இந்தியாவை பெருமைபடச் செய்தவர். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் காட்பாதர் என்ற கன்னட படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

அஜீத் குமார் நடித்த வரலாறு படத்தின் கன்னட ரீமேக்கான இந்த படத்திற்கு ரஹ்மானுக்கு ரூ.1.5 கோடி சம்பளம். இது எந்த இசையமைப்பாளரும் இதுவரை வாங்காதது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் உபேந்திரா அஜீத் ரோலில் நடிக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 31ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் அன்று பாரத் பந்த் என்பதால் விழா தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு பெங்களூரில் உள்ள சான்சலரி ஹோட்டலில் நடைபெற்றது. இதில் ரஹ்மான் கலந்து கொண்டு பேசினார்.

இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் மஞ்சு கூறுகையில்,

சேன்டல் உட் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசைமைப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த படத்தில் 2 பாடல்களுக்கு அவர் புது மெட்டு போட்டுள்ளார். மீதமுள்ள பாடல்களுக்கு தமிழ் பாடல்களில் இருந்து மெட்டெடுத்துக் கொடுத்துள்ளார். தற்போது பின்னணி இசை வேலையில் பிசியாக இருக்கிறார் என்றார்.

ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கனவே சஜினி என்ற கன்னட படத்திற்கு இசையமைத்துள்ளார். அந்த படத்திற்கு ஜோடி படப் பாடல்களின் இசையை பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments