
சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் டெபாசிட் செய்திருந்த திரிஷாவின் பணத்தை வங்கி ஊழியரே நூதன முறையில் ஆட்டையை போட்டு விட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தனியார் வங்கியில் கணக்கு தொடங்கிய திரிஷா சில கோடி ரூபாய்களை அந்த வங்கியில் டெபாசிட் செய்திருந்தாராம். கடந்த வாரத்தில் வங்கி கணக்கை சரி பார்த்த ஊழியருக்கு ஒரு கோடி ரூபாய் குறைந்தது கண்டு அதிர்ச்சியடைந்து விட்டாராம். உடனே வங்கி அதிகாரிகளிடம் புகார் செய்த உடனே போலீசுக்கு போக வேண்டாம் என்று வங்கி அதிகாரிகள் கெஞ்சியுள்ளனர். இதனால் த்ரிஷாவும் புகார் கொடுக்காமால் விட்டு விட்டாராம்.
வங்கி அதிகாரிகள் விசாரித்ததில் அதே வங்கியில் கலெக்சன் சென்டரில் உள்ள ஒருவர் மீது சந்தேகப்பட்டு விசாரித்தனர். வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்தை அவர்களது கணக்கில் வரவு வைக்கும் ஊழியர், த்ரிஷாவின் கணக்கு விபரங்களை கம்யூட்டரில் இருந்து டவுன்லோடு செய்துள்ளார். பின்னர் அதைப் பயன்படுத்தி ஒரு கோடியை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்திருக்கிறாராம்.
திரிஷாவின் வங்கி கணக்கிற்கு பணம் போய் சேர்ந்ததா என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லையாம்.
Comments
Post a Comment