தமிழ் சினிமா நட்சத்திரங்களின் கார்கள்-சிறப்பு பார்வை!!!

Wednesday,May,30,2012
பொதுவாக சினிமா நட்சத்திரங்களுக்கு ஆடம்பர ஐட்டங்கள் மீது ஆர்வம் அதிகம். குறிப்பாக, கார்கள் விஷயத்தில் அவர்களது ஆடம்பர எண்ணம் பளிச்சிடும். பாலிவுட் நட்சத்திரங்கள்தான் தங்கள் அந்தஸ்தை வெளிப்படுத்த கோடிகளை கொட்டி கார்களை வாங்குவர். அந்த 'டிரென்ட்' காற்று தமிழ் சினிமாவிலும் வீசத் துவங்கியுள்ளது.

அண்மையில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கி இயக்குனர் ஷங்கர் பரபரப்பை ஏற்படுத்தினார். பதிவு செலவு உட்பட ரூ.3 கோடியை தாண்டிய அந்த கார் அவரது பிரம்மாண்ட எண்ணத்தின் உச்சத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.

தமி்ழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் பிஎம்டபிள்யூ சொகுசு காரை வைத்துள்ளார்.

ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி வாங்கிய சந்தானம்:

காமடி நடிகராக கலக்கி வரும் 'நண்பேண்டா' சந்தானம் சமீபத்தில் ரூ.85 லட்சம் கொடுத்து ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி வாங்கியிருக்கிறார். பதிவு செலவு மற்றும் இறக்குமதி வரியை சேர்க்கும்போது இந்த காரின் விலை ஒரு கோடியை தாண்டும்.

தமிழில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் சூர்யா இருவரும் ஆடி நிறுவனத்தின் சொகுசு கார்களை வைத்திருக்கின்றனர். அடுத்து 'தல' அஜீத். இவர் முதனமுதலாக வாங்கியது சிவப்பு நிற மாருதி 800 கார்.

அதன் பின்னர் அவர் தொடர்ந்து வாங்கிய அனைத்துமே வெள்ளை நிற கார்கள்தான். கார் பந்தய வீரரான அஜீத் எளிமை விரும்பியும் கூட. தற்போது மாருதி ஸ்விப்ட் காரை பயன்படுத்தி வருகிறார்.

சிலம்பரசன் மற்றும் தனுஷ் ஆகியோர் பிஎம்டபிள்யூ கார் வைத்திருக்கின்றனர். சரத்குமார்-ராதிகா தம்பதியர் பிஎம்டபிள்யூ கார் வைத்திருக்கின்றனர். முன்னணி நடிகையான த்ரிஷா ரூ.1.25 லட்சம் மதிப்புடைய மெர்சிடிஸ் பென்ஸ் கார் வைத்திருக்கிறார்.

கார் பரிசு கலாச்சாரம்:

பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் தனது படங்கள் வெற்றியடைந்தால், அதில் முக்கிய பங்கு வகித்தவர்கலுக்கு விலை மதிப்புமிக்க கார்களை வாங்கி பரிசாக அளிப்பார். அந்த கலாச்சாரம் தற்போது தமிழ் சினிமாவிலும் பரவியுள்ளது.

'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தை இயக்கிய விஜய் ரூ.87 லட்சத்துக்கு பிஎம்டபிள்யூ கார் வாங்கியிருக்கிறார். அந்த படத்தின் ஹீரோவும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின்தான் இந்த காரை விஜய்க்கு பரிசாக கொடுத்ததாக கூறப்படுகிறது.

Comments