படவாய்ப்பை தட்டிப் பறிப்பதா?: டாப்சி மீது ரிச்சா பாய்ச்சல்!!!

Monday, May, 21, 2012
டாப்சி ரிச்சா இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் தமிழில் சில படங்களில் நடித்துள்ளனர். ஆடுகளம் படம் மூலம் டாப்சி பிரபலமானார். ரிச்சாவுக்கு மயக்கம் என்ன, சிம்புவின் ஒஸ்தி படங்கள் பெயர் வாங்கி கொடுத்தன.

தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இரண்டாவது நாயகியாக ரிச்சாவை தேர்வு செய்தனர். அஜீத் படத்தில் நடிக்கும் சந்தோஷத்தில் அவர் துள்ளி குதித்தார். அதில் நடிப்பதற்காக வேறு படங்களை உதறி விட்டு காத்து இருந்தார்.

ஆனால் திடீரென்று டாப்சி குறுக்கிட்டு வாய்ப்பை தட்டி பறித்து விட்டார். அஜீத் படத்தில் ரிச்சாவுக்கு பதில் டாப்சி நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் டாப்சி மேல் ரிச்சா கடும் கோபத்தில் உள்ளார். இருவருக்கும் பனிப்போர் நடப்பதாக நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

Comments