

போடா போடியில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி அறிமுகம். படத்தின் கதைக்கு நல்ல டான்ஸராக ஹீரோயின் இருக்கணும், அதனால்தான் வரலட்சுமியை செலக்ட் செய்தோம் என்று சிம்பு அளித்த ஆரம்ப அறிமுகம் அட்டகாசமாகவே இருந்தது. ஆனால் கன்னித்தீவு கதையாக படப்பிடிப்பு ஜவ்வாக இழுத்து பல வருடங்களை விழுங்கியது. இன்னும் படம் முடிவதாயில்லை.
முதலில் சிம்பு கேட்டுக் கொண்டதால் வேறு படங்கள் எதையும் கமிட் செய்யவில்லை இவர். வருடங்கள் பல கரைந்து போனதால் கடைசியில் ராதாமோகன் தமிழ், தெலுங்கில் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
இந்நிலையில் அப்படத்திலிருந்து வரலட்சுமியை தூக்கியிருக்கிறார்கள். ஆந்திர ரசிகர்களின் மசாலா வாடைக்கு வரலட்சுமி சூட் ஆக மாட்டார் என்று ஹீரோ தரப்பு பிரஷர் தந்ததால்தான் இந்த மாற்றம் என்கிறார்கள்.
Comments
Post a Comment