நடிகை ஷில்பா ஷெட்டிக்கு ஆண் குழந்தை பிறந்தது!!!

Tuesday, ,May, 22, 2012
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு நேற்று(மே 21) காலை ஆண் குழந்தைப் பிறந்துள்ளது.

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கும், தொழில் அதிபர் ராஜ் குந்தராவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஷில்பா ஷெட்ட்டி கர்ப்பமானார். அவருக்கு மே 20 தேதியில் குழந்தை பிறக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மேற்கு மும்பை கார் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு வழக்கமான பரிசோதனைக்காக சென்ற ஷில்பா ஷெட்டியை மருத்துவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் ஆகுமாறு கூறினார்கள். இதையடுத்து நேற்று அதிகாலை அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

தனக்கு குழந்தை பிறந்த சந்தோஷத்தை ஷில்பாவின் கணவர் ராஜ் குந்த்ரா டுவிட்டர் இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார். அத்துடன் தனது மனைவி மற்றும் பிரசவம் பார்த்த மருத்துவர்கள் ஆகியோருக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

Comments